திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (10:29 IST)

இன்னும் சில நிமிடங்களில் திமுக ஊழல் பட்டியல்: சென்னை பாஜக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

இன்னும் சில நிமிடங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி அறிவிப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். நேற்று கூட அவர் நாளை 10:30 மணிக்கு திமுக ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
 
 இந்த நிலையில் திமுக ஊழல் பட்டியல் குறித்த செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் குவிந்து உள்ள நிலையில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட நிலையில் பாதுகாப்பு குறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva