போலி புத்தகங்களில் ஜூன் மாத முத்திரை.. விஜய் பிறந்தநாளா?.. திமுக அட்டாக்...
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. ஆனால், விஜய் முதல்வரான பின் அது திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பல போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் போலியான பல ஆயிரம் புத்தகங்களை அங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும்,. புத்தகங்களில் பல தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன எனவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்,
இதையடுத்து, திமுக ஆட்சியில்தான் இந்த ஊழல் நடந்துள்ளது என அமைச்சர் ராஜ்மோகன், முதல்வர் விஜய் ஆகியோர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்நிலயில், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது.
31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார்.
07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி.
20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன?
தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே?
பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா?
அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன?
புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன?
ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது?
திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை? குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும்.
முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்! கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா? என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.