1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk mla arul vignesh sentenced to prision

த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...

arul vignesh
பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கள்ளக்குறிச்சி மகளிர் நிலைய காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அருள் விக்னேஷிடம் சம்மன் கொடுத்தனர்.

ஒருபக்கம் புகாரளித்த  மாவட்ட பெண் கலெக்டர் மற்றும் அவரின் கணவரிடமும் விசாரணை அதிகாரி திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார். அதன்பின் நேற்று மாலை அருள் விக்னேசை போலீசார் கைது செய்தனர். அதன்பின் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்பின் நீதிபதியிடம் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதை எடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...