தவெக ஆட்சியை கலைக்க முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்!. அதிமுக மதுரை பிரமுகர் மன்னன் கைது..
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக மதுரை எம்.எல்.ஏ முஸ்தபா அதிமுகவும், திமுகவும் சேர்ந்து தவெக ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகின்றன.பல தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். சமீபத்தில் ஒரு அதிமுக பிரமுகர் என்னை தொடர்பு கொண்டு சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராக தாங்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.. அப்படி செய்தால் ரூ.30 கோடி கொடுக்கிறோம்.. முதலில் 15 கோடி.. வாக்கெடுப்பு நடக்கும்போது 15 கோடி என கொடுக்கிறோம் என பேரம் பேசினார் என்று கூறியிருந்தார்..
அதன்பின் தன்னிடம் இருந்து ஆதாரங்களை வைத்து மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மதுரை முன்னாள் துணை மேயரான மன்னனை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

