1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk is upset with annamali growth in tn polytics

அண்ணாமலை Vs விஜய்!. மாறப்போகும் அரசியல் களம்!.. பதட்டத்தில் திமுக!...

annamalai
தமிழக பாஜக தலைவராக பலர் வந்தாலும் அவர்களில் முக்கியமானவர். அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த கட்சியை தமிழகத்தில் வளர்ந்தது என சொல்லலாம். அதாவது அண்ணாமலையின் வருகைக்கு பின்னரே தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இரண்டு சதவீதத்திற்கும் கீழே இருந்த பாஜகவின் வாக்கு வங்கியை 8 சதவீதமாக உயர்த்தியது அண்ணாமலைதான்..

அதற்கு காரணம் அரசியல் களத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டவர் அண்ணாமலை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து ஆளும் கட்சியான திமுகவை விமர்சனம் செய்தார். நிறைய பேட்டிகள் கொடுத்தார். திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்து பேசி வந்தார்.. ஒருபக்கம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்கிற இமேஜும் அவருக்கு கை கொடுத்தது.. நன்றாக படித்தவர், இளைஞர், அரசியலுக்கு பொருத்தமானவர், நாட்டை நன்றாக வழி நடத்துவார், முதலமைச்சர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் என இவரை குறிப்பிட்டு சதவீதம் பேர் நம்பினார்கள். அவர்கள்தான் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

தற்போது பாஜகவிலிருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்கிற இயக்கத்தை உருவாக்கியதோடு விரைவில் அது அரசியல் கட்சியாக மாறும் எனவும் அறிவித்திருக்கிறார். இது திமுகவின் வயிற்றில் புளியை கரைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் திமுக ஆட்சியில் இருந்தபோது பழனிச்சாமியை ஓவர்டேக் செய்து பாஜகதான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பது போன்ற ஒரு இமேஜை உருவாக்கியவர் அண்ணாமலை.

தற்போது தவெக ஆட்சியில் இருக்கும் நிலையில் தினமும் செய்தியாளர்கள் சந்திப்பு, அதிரடி பேட்டிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என திமுகவை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சி என்கிற இடத்தை அவர் பிடித்து விடுவாரோ என அறிவாலயம் பதறி போயிருக்கிறதாம். விஜயை எதிர்க்கப்போவது உதயநிதியா? அண்ணாமலையா? என்கிற நிலை வரும்போது அது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.