1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kasthurai raja wants dhanush come to polytics

அரசியலுக்கு வா!.. அழுத்தம் கொடுக்கும் கஸ்தூரி ராஜா!. விஜய் ரூட்டில் தனுஷ்...

dhanush vijay
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். இவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என வலம் வருகிறார். கோலிவுட்டில் மிகவும் பிசியாக, தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் இவர்.

இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில்தான், வருகிற 28ம் தேதி தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் அன்று அவர் ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கமாக மாற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு பின்னணியில் உள்ள காரணம் தனுஷ் அரசியலுக்கு வரவேண்டும் என அவரின் தந்தை கஸ்தூரி ராஜா விரும்புகிறாராம்..

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் எப்படி தனது மகன் விஜயை அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்து அவரின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினாரோ அதே ரூட்டை கஸ்தூரி ராஜாவும் கையில் எடுக்கப் போகிறாராம். அனேகமாக தனுஷின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

எனவே, இனிமேல் தனுஷ் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார் எனவும், அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வார் எனவும் சொல்லப்படுகிறது. அதோடு, அடுத்து நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனுஷின் ரசிகர்கள் போட்டியிடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்ட நிலையில் திரையுலகில் பலருக்கும் அந்த ஆசை வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய்க்கு கிடைத்தது தனுசுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.