விசிக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் திமுக!.. தடுக்கும் முயற்சியில் திருமா!...
பொதுவாகவே ஒரு அரசியல் கட்சியிலிருந்து ஒருவர் விலகி மற்றொரு கட்சியில் இணைவது என்பது மிகவும் சாதாரண ஒன்றுதான். கடந்த பல வருடங்களாகவே மக்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து திமுகவுக்கும், திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கும், பாஜகவிலிருந்து திமுகவுக்கும் என பல கட்சிகளில் இருந்து பலரும் மாறுவார்கள்.
அது அவர்களுக்கு கிடைக்கும் பதவி மற்றும் ஆதாயத்தை பொறுத்தது. எம்ஜிஆர் கூட திமுகவிலிருந்து விலகி அதிமுகவை தொடங்கினார். அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஒருகட்டத்தில் அக்கட்சியில் அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு போனார். இப்போது தவெகவில் இருக்கும் முக்கிய நிர்வகியான ஆதவ் அர்ஜுனா முன்பு விசிகவில் இருந்தவர்தான். இப்படி பல உதாரணங்கள் இருக்கிறது.
இந்நிலையில், திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே விசிகவின் முக்கிய நிர்வாகியான பனையூர் பாபு விசிகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இனிமேல் சந்தேக பார்வை கொண்ட தலைமைக்கு கீழ் செயல்பட முடியாது.. திருமாவளவன் எனக்கு எந்த பொறுப்பை கொடுக்க முன் வந்தாலும் அது எனக்கு வேண்டாம் என பனையூர் பாபு கூறியிஇருக்கிறார். அனேகமாக தேர்தல் முடிவுக்கு பிறகு பெரும் படையோடு அவர் விசிகவிலிருந்து விலகி திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் திமுகவில் முக்கிய நிர்வாகியும், எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷா நவாசை திமுகவுக்கு கொண்டு வரும் முயற்சியும் நடப்பதாக சொல்லப்படுகிறது. இது தெரிந்ததால்தான் கடந்த 24ம் தேதி நள்ளிரவில் ஆளூர் நவாஸுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் பதவியை திருமா கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
பொதுவாக கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகிகளை திமுக தங்கள் பக்கம் இழுக்காது.. ஆனால் தற்போது விசிக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.