1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Low-Pressure Area Formed in Bay of Bengal: IMD Predicts Rain in Tamil Nadu

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா?

வங்கக் கடல்
வடக்கே உள்ள வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று  ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 
 
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
2028ல் மீண்டும் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியா? அமெரிக்க அரசின் சட்டம் இடம் கொடுக்குமா?