1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dharmapuri public question to edappadi palanisamy

அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத! – கேள்வி கேட்டவரை ஆஃப் செய்த எடப்பாடியார்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க சென்ற முதல்வரிடம் நபர் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈருபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் ”வறட்சியான தர்மபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி “அட இருப்பா.. பேசிட்டு இருக்கும்போது குறுக்க பேசாத.. கடைசியா கேள்வி கேட்க நேரம் தறேன்” என கூற, ஆனால் அந்த நபர் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கட்சி நிர்வாகிகள் அவரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
40 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோன நிலவரம்!