1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kadambur Raju complaint two ammk members under case

பட்டாசு போட்டு கொலை முயற்சி; கடம்பூரார் புகார்! – அமமுகவினர் மீது வழக்கு!

Tamilnadu
அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு கொளுத்திய விவகாரத்தில் அமமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் நிலையில், அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ காரில் சென்றபோது கார் அருகே அமமுகவினர் பட்டாசு கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுகவினர் திட்டமிட்டு தன் காரை வழிமறித்து பட்டாசை கொளுத்தி போட்டதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அமமுகவினர் மீது புகாரளித்துள்ளார்.

அமைச்சரின் புகாரின் அடிப்படையில் அமமுகவினர் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தஞ்சையில் மேலும் 8 மாணவ்ர்களுக்கு கொரோனா! – 200 ஐ நெருங்கும் பாதிப்பு!