வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (00:48 IST)

பனம்பழத்தை அதிகமாக சாப்பிடுவது நல்லதா...?

பனம்பழம், உடலுக்குக் குளிர்ச்சிதரும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. பனம்பழம் உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம்.
 
பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் நெருப்பு மூட்டி சுட்டும் சாப்பிடலாம். சதைப் பகுதியைச் சாப்பிட வேண்டும். பனம்பழத்தில் மாவுச்சத்து அதிகம்.
 
குறைந்த கலோரி மட்டுமே கொண்டுள்ளது. பாஸ்பரஸ் சத்து இருப்பதால், எலும்புகள் வளர்ச்சிக்குப் பனம்பழம் துணைபுரியும். ஆனால் அதிகம் சாப்பிட்டால், வயிற்று உபாதை ஏற்படக்கூடும்.
 
பனம்பழத்தின் சத்துக்கள் நுங்கிலும் கிடைக்கும். பனம்பழத்தை அதிகம் சாப்பிடக் கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணி சரும நோய்களை பனம் பழம்  சரி செய்கிறது. பனம் பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தை தருகிறது. மலச் சிக்கலைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
 
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் பனம் பழத்தை சாப்பிடலாம். பனம் பழத்தின் சாற்றை சரும நோய்களக்குப் பூசுவதால் நிவாரணம் கிடைக்கும்.
 
பனம் பழச் சாற்றுடன் மாவு சேர்த்து பிசைந்து பனியாரம் செய்து சாப்பிடுவார்கள். தேங்காய், வாழைப் பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்பு பலகாரங்கள் செய்வார்கள். தக்காளி ஜாம் போலவும் பனம் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள்.