ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (09:24 IST)

தஞ்சையில் மேலும் 8 மாணவ்ர்களுக்கு கொரோனா! – 200 ஐ நெருங்கும் பாதிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 180 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.