1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (09:38 IST)

அமெரிக்க தலைநகரில் திடீர் துப்பாக்கிச் சூடு! – 10 பேர் பலியானதால் பதற்றம்!

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வபோது சிலர் துப்பாக்கியால் பொதுமக்களை சுடும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் அட்லாண்டாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில் அதேபோன்ற சம்பவம் வாஷிங்டனிலும் நடந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர் அங்கிருந்த மக்களை சிறை பிடித்துள்ளார்.

இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் திடீரென ஆத்திரமடைந்த ஆசாமி சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் காவலர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். ஆசாமியை மடக்கி பிடித்த போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.