1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Depression to be formed in 12 hours

12 மணிநேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

Rain
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது!