தொடர்புடைய செய்திகள்
- மும்பை - ஹைதராபாத் புல்லட் ரயில்.. பயண நேரம் வெறும் 3 மணி நேரம் தான்.. 300 கிமீ வேகம்..
- இமயமலை பனிச்சிகரங்கள், பசுமை பள்ளத்தாக்குகள் வழியே செல்லும் ரயில்.. இன்று முதல் மீண்டும் தொடக்கம்...
- வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஒரு இளம்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்..!
- இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?
- சென்னை - குருவாயூர் ரயில் பாதை திடீர் மாற்றம்.. என்ன காரணம்?
இது வந்தே பாரத் ரயிலா? இல்லை ஸ்டார் ஓட்டல் அறையா? மும்பை - பெங்களூரு ஸ்லீப்பர் ரயில்...
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் புரட்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இரு முக்கிய பொருளாதார நகரங்களை இணைக்கும் புதிய 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பயணத்தை வேகமாகவும், சொகுசாகவும் மாற்றும் நோக்கில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் ஏசி பெட்டியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வழக்கமான ரயில்களில் இருக்கும் செங்குத்தான ஏணிகளுக்கு பதிலாக, மேல் படுக்கைகளுக்கு செல்ல பிரத்யேகப் படிக்கட்டுகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்லைடிங் கதவுகள், நவீன விளக்குகள் மற்றும் மென்மையான உட்புற வடிவமைப்பு என ஒரு ஸ்டார் ஹோட்டல் அறை போன்ற பிரீமியம் அனுபவத்தை இது பயணிகளுக்கு வழங்கும்.
தற்போது இந்த வழித்தடத்தில் பயணிக்கும் ரயில்கள் 20 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்து கொள்கின்றன. ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த பயண நேரத்தை கணிசமாக குறைத்து, 14 முதல் 16 மணி நேரத்திற்குள் இலக்கை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன், 823 பயணிகள் பயணிக்கும் வசதி, அதிநவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இந்த ரயிலின் தொடக்க தேதி, கட்டண விவரங்கள் மற்றும் முன்பதிவு அட்டவணையை இந்திய ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
Edited by Siva
