1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 'Shut Down Malls Too': Is Telegram Hurting Its Own Case With Snarky Replies On X?

மால்களை மூடுங்கள்.. சாலைகளை மூடுங்கள்.. டெலிகிராம் நிறுவனத்தின் நையாண்டி எக்ஸ் பதிவு..

telegram
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தடை நியாயமானதா என்ற விவாதங்கள் ஒருபுறம் நடந்து வர, எக்ஸ் தளத்தில் டெலிகிராம் நிறுவனம் கார்த்தி சிதம்பரம் எம்பி-க்கு அளித்த நையாண்டியான பதில் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
"வணிக வளாகங்களில் திருட்டு நடக்கிறது என்பதற்காக மால்களையே மூடிவிடுவீர்களா, அல்லது யாரோ வேகமாக வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதற்காக சாலைகளையே மூடிவிடுவீர்களா?" என்று டெலிகிராம் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது. தனிப்பட்ட பயனர்களின் தவறுகளுக்கு தளத்தை குற்றம் சொல்ல கூடாது என்று வாதிட நினைத்த டெலிகிராம், மிக தவறான உதாரணத்தை கையாண்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த ஒரு தீவிரமான வினாத்தாள் கசிவு பிரச்சினையை டெலிகிராம் நிறுவனம் கொச்சைப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீதிமன்றங்கள் மூலமாகவோ அல்லது முறையான சட்ட வழிகளிலோ தங்களது வாதங்களை முன்வைக்காமல், சமூக வலைத்தளங்களில் இவ்வாறு நையாண்டி செய்தது டெலிகிராம் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சேம்சைடு கோல்  என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் செயலால் இந்தியாவில் டெலிகிராம் மீதான பொதுமக்களின் பார்வை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva