1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ntk seeman may contest in ampasamuthiram

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான்?!.. நாதகவில் நடப்பது என்ன?..

seeman
15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கியவர் சீமான். அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனது அரசியலை சீமான் முன்னெடுத்தார். எனவே , திராவிட கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதன் காரணமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தார்கள்.  கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதாவது 35 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் சீமான் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் அந்த கட்சி டெபாசிட் இழந்தது..

தற்போது விரைவில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மற்ற 5 தொகுதிகளையும் புறக்கணித்துவிட்டு அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டும் சீமான் போட்டியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் விரும்புகிறார்களாம். தனித்து போட்டியிட்டால் நம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் பொது வேட்பாளராக நிற்கலாம். இதற்காக திமுக, அதிமுக கட்சிகளிடம் பேசிப் பார்க்கலாம் எனவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் சீமானோ ‘மக்களை நம்பி நான் தனித்து களம் காண்போம்’ என சொல்லியிருருக்கிறார். பொது வேட்பாளர் என்றால் நீங்கள் போட்டியிடுங்கள்.. தனித்து போட்டு இருந்தால் நீங்கள் நிற்க வேண்டாம்’  என கட்சி நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்களாம்.
அடுத்த கட்டுரையில்
சொன்னத செய்யலனா மீண்டும் குண்டு போடுவோம்!.. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்..