1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three days heavy rain for tamil nadu

காற்றழுத்த தாழ்வு எதிரொலி: 3 நாட்களுக்கு கனமழை!

கனமழை
வங்க கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது
 
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?