1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (20:12 IST)

இதுகூட தெரியாமல் குற்றஞ்சாட்டுகிறார்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

சென்னை நகருக்கு நேற்றே ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார் என்றும் இது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைக்கிறார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
சென்னை மாநகரில் மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நேற்றே நியமிக்கப்பட்டனர். ஆனால், அதுகூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
 
காஜா புயல் ஓய்ந்த பிறகு மக்களை போய் பார்க்கும் முதல்வர், எங்கள் முதல்வர் அல்ல.  மழை பெய்யும்பொழுதே பேரிடர் நேரத்தில் களத்தில் மக்களோடு நிற்கிறவர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.