1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cv shanmugam talking against edappadi palanisamy

ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..

cv shanmugam
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சி தேர்தலில் எதிலும் பொதுச் செயலாளரால் வெற்றி பெறமுடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பழனிச்சாமியின் சொந்த செல்வாக்கில்தான் 44 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.. 47 தொகுதிகளில் மட்டுமே அவருக்கு செல்வாக்கு என்றால் மற்ற தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்கிறாரா?..

சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதிகளில் ஏன் பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்லை?.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டத்தில் பூஜ்ஜியம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அதிமுக முழுமையான தோல்வி..

கூட்டணியில் பாமக இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அதிமுக வென்றது. வென்றால் எடப்பாடி பழனிச்சாமி காரணம்.. தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.. காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்’  என அவர் கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு!.. சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!...