1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cv shanmugam discuss about joning tvk

தவெக கொடி கட்டிய கார்!.. தவெகவில் இணைகிறாரா சிவி சண்முகம்?!..

shanmugam
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது முதல் அதிருப்தி கொடியை தூக்கியவர் சண்முகம்தான். சிவி சண்முகம், எஸ்பி வேலு தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை சொன்னார்கள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே தவெக விரும்பியது. ஆனால் பழனிச்சாமி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு தவெகவுக்கு 108 தொகுதிகளில் வெற்றி கிடைத்தவுடன் திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முயன்றார் என குண்டை தூக்கிப் போட்டார் சிவி சண்முகம். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

அதோடு அந்த 24 எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்படி ஆதரவளித்த எல்லோரிடமிருந்தும் முக்கிய பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இதுவரை 6 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் நேற்று தவெகவில் இணைந்தனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விட்டாலும் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை திருப்பி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதில், சிவி சண்முகம் தற்போது வரை பழனிச்சாமியை நேரில் போய் பார்க்கவில்லை

இந்நிலையில்தான், அதிமுகவில் நீடிப்பதா அல்லது தவஎகவில் இணைவதா என திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் சிவி சண்முகம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.  தவெக கொடி கட்டிய காரில் சிலரும் ஆலோசனையில் பங்கேற்றிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
தனியார் கல்லூரியில் அதிக கட்டணம்!.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!...