1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CT Ravi says about ops joined in BJP

ஓபிஎஸ் பாஜகவில் இணைவது உண்மையா? சி.டி ரவி தகவல்

ops
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய போவதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் சிடி ரவி பதிலளித்துள்ளார். 
 
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே ஒற்றை தலைமை குறித்த போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அதிமுகவுக்கு ஓ பன்னீர்செல்வம் துரோகம் செய்து விட்டார் என்றும் அவர் பாஜகவில் இணைய முடிவு செய்துவிட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி இது அனுமானத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்வி என்றும் பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் இது பற்றி பேசினால் தான் என்னால் பதில் சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
முடிவுக்கு வருகிறது கூகுள் ஹேங்ஸ் அவுட்: பயனாளிகள் அதிர்ச்சி!