ரூ.45,000க்கு பதில் தவறுதலாக சென்ற ரூ.1.42 கோடி சம்பளம்: தலைமறைவான ஊழியர்
ரூ.45,000க்கு பதில் தவறுதலாக சென்ற ரூ.1.42 கோடி சம்பளம்: தலைமறைவான ஊழியர்
ஊழியர் ஒருவருக்கு 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வர வேண்டிய நிலையில் அவருக்கு தவறுதலாக ரூபாயை 1.42 கோடி சம்பளம் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்த ஊழியர் ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலி நாட்டில் இறைச்சி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனம் தவறுதலாக 256 மடங்கு அதிகமாக அவருக்கு சம்பளத்தை அனுப்பியது. அதாவது 45 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 1.42 கோடி தவறுதலாக அனுப்பிவிட்டது. இதனை அடுத்து அந்த நபரை தொடர்பு கொண்ட அலுவலக நிர்வாகம் உடனடியாக பணத்தை திருப்பி அளிக்கும்படி கூறியுள்ளது.
அவரும் பணத்தை திருப்பிக் கொண்டு வருவதாக கூறிய நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். மேலும் அவர் வேலையையும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.