தொடர்புடைய செய்திகள்
- சிபிஐ விசாரணை!.. டெல்லி செல்லும் விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா?...
- எங்களுக்கு சீட் இல்லனாலும் பரவால்ல!.. தவெக மீட்டிங்கில் நிர்வாகிகள் சொன்னது என்ன?..
- அதிமுக கூட்டணிக்கு போலாமா? வேணாமா?!.. கட்சி நிர்வாகிகளுடன் தவெக திடீர் ஆலோசனை..
- விஜயுடன் கல்யாணத்துக்கு போன சம்பவம்!. செய்தியாளர்கள் கேள்விக்கு திரிஷா ரியாக்ஷன்!..
- திமுகவின் ஸ்லீப்பர் செல் ஆதவ் அர்ஜுனா!.. விஜய்க்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வார்னிங்!..
அதிமுக - பாஜகவுடன் தவெக கூட்டணியா?.. சி.டி.நிர்மல் குமார் முக்கிய தகவல்..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி முழுநேர அரசியல்வாதியாக தற்போது மாறியிருக்கிறார். அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் திமுகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயன் ஒரே நோக்கமாக இருக்கிறது.. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணியை விஜய் இதுவரை அமைக்கவில்லை.. அதேபோல் மற்ற எந்த அரசியல் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
இது அந்த கட்சிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக நேற்று முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காணொளி மூலம் தவெக மாவட்ட செயலாளர்களிடம் கூட்டணிக்கு செல்வது பற்றி நேற்று ஆலோசனைகள் நடத்தியதாகவும், அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்று சொன்னதாக செய்திகள் வெளியானது..
இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சிக்க துவங்கினார்கள்.. விஜய் ரசிகர் பலருமே இதற்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தவெக இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் மக்கள் பிரச்சனைகளில் இருந்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில் தொடர்ந்து தவெகவை தொடர்பு படுத்தி யூகங்களின் அடிப்படையில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் தினசரி பல செய்திகள் வெளியாகி வருகிறது.. கட்சி சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தொண்டர்கள் பின்பற்றவும் என தெரிவித்திருக்கிறார்.