1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk suporters celebrate victory in office

10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை!.. தவெகவினர் கொண்டாட்டம்!..

vijay
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது துவக்கம் முதலே இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் பெற்று வருகிறது..

தற்போது வரை 14 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 38,000 வாக்குகளும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 25,265 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 21,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 1051 வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது திமுக வேட்பாளரை விட தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 12,500 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறார்.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 41,327 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 33,763 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 26,561 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 3361 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருப்பதால் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பினராயி விஜயன் மற்றும் மகள், மருமகன் மீது வழக்கு தொடர அனுமதி.. கேரள ஐகோர்ட் உத்தரவு..