1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cpi cpm interview about givine support to tvk

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிடம் மீண்டும் ஆதரவு கேட்ட தவெக!..

iuml
ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இல்லை என்பதால் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. இதில் காங்கிரஸ் கட்சி தனது தங்களின் 5 எம்எல்ஏக்களை தவெகவுக்கு கொடுத்தது. எனவே தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் தற்போது சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துவிட்டன. எனவே தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 உயர்ந்திருக்கிறது. திருமாவளவன் மட்டுமே இப்போது வரை முடிவை சொல்லாமல் இருக்கிறார். ஆனாலும் விரைவில் அவர் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு தர மறுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் மீண்டும் தவெக நேரில் சென்று ஆதரவு கேட்டிருக்கிறது. தவெக எம்எல்ஏ மற்றும் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் மற்றும் மத்திய மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற முஸ்தபா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை நேரில் சந்தித்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டனர்.

ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் சொல்வதையே நாங்கள் கேட்போம் என காதர் மொய்தின் கூறியிருந்தார். தற்போது  திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு கொடுக்குமா என்பது தெரியவில்லை.. இந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டால் தவெகவ்வின் பலம் சட்டசபையில் மேலும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
துரோகிங்க கூட ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்!. விஜயை எச்சரிக்கும் விஜய பிரபாகரன்!...