1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. this is the reason actor vijay wont work after 6 pm

விஜய் 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டார்!. இதுதான் காரணம்!. ஷோபா சந்திரசேகர் பேட்டி!..

vijay ravi
நடிகர் விஜய் 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்தவர். அதன் மூலம் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர். விஜய் தற்போது அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராகவும் மாறவிருக்கிறார். விஜய் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. எனவே அவர் விரைவில்  தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஒருபக்கம் விஜய் 6 மணிக்கு மேல் வெளியே வர மாட்டார்.. 6 மணிக்கு மேல் அவருக்கு சில பழக்கங்கள் உண்டு என அவரை பற்றி பல வதந்திகள் பல வருடங்களாகவே பரவி வருகிறது. இந்நிலையில், அதுபற்றி விளக்கமளித்த விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர்  ‘பொதுவாக ஆறு மணிக்கு மேல் விஜய் வேலை செய்யமாட்டார். ஷூட்டில் இருக்க மாட்டார்..

அது அவரின் அப்பாவின் வளர்ப்பு.. காலை 7 முதல் மாலை 6 மணிவரை அல்லது காலை 9 முதல் 6 மணி வரை மட்டுமே ஷூட்டிங்கில் இருப்பார். இரவு ஷூட்டிங் என்றால் மட்டுமே அவர் இரவில் ஷூட்டிங் செல்வார்.. அப்போது கூட பகலில் விஜய் வீட்டில்தான் இருப்பார்’ என சொல்லியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலினை தொடர்ந்து வைகோ, திருமாவளவனையும் சந்திக்கும் முதல்வர் விஜய்.. அரசியல் நாகரீகமா?