1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cpi cpm interview about givine support to tvk

விஜய்க்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என ஸ்டாலின் சொல்லவில்லை. இடதுசாரிகள் பேட்டி!...

vijay stalin
விஜயின் தவெகவுக்கு சிபிஎம், சிபிஐ ஆகிய இரண்டு கட்சிளும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தவெகவின் பலம் 116ஆக உயர்ந்திருக்கிறது. ஆட்சியமைக்க தவெகவுக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. அனேகமாக விடுதலை சிறுத்தை தனது 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்துவிடும். எனவே, இன்று மாலை விஜய் முழு மெஜாரிட்டியுடன் ஆளுநரை சந்தித்து தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய்க்கு ஆதரவு கொடுத்த சிபிஎம், சிபிஐ இரண்டு கட்சிகளின் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ‘அமைச்சரவையில் பங்கேற்கமாட்டோம்.. வெளியே இருந்து தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதிமுக, திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தவெக மட்டுமே ஆட்சியமைக்க முடியும்..

விஜயை ஆதரிக்க திமுகவின் அனுமதி தேவையில்லை. நாங்கள் தனிக்கட்சி.. எங்களுக்கு முடிவெடுக்க தெரியும். தவெகவை ஆதரிக்க வேண்டாமென திமுக தலைவர் முக ஸ்டாலின் எங்களிடம் சொல்லவில்லை. திமுக எதிர்கட்சியாக இருக்கவேண்டும் என அவர் சொல்லிவிட்டார். ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெவை ஆதரிக்க முடிவு செய்தோம்.. மதச்சார்பற்ற அரசை அமைப்போம் என விஜய் சொல்லியிருக்கிறார். தவெகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் திமுகவுடனான உறவு தொடரும்’ என கூறியிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிடம் மீண்டும் ஆதரவு கேட்ட தவெக!..