1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor Vijay Set to Become CM: TVK Secures 119 Seats with Support from Congress, Left, and VCK

முதல்வராகிறார் விஜய்.. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி

தமிழக அரசியல்
தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றமாக, திராவிடக் கட்சிகள் அல்லாத புதிய ஆட்சி அமையவிருப்பது உறுதியாகியுள்ளது. 
 
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்கத் தேவையான பெரும்பான்மையை திரட்டியுள்ளார்.
 
தவெக-வின் 108 உறுப்பினர்களுடன், காங்கிரஸ் கட்சியின் 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2 உறுப்பினர்கள் என மொத்தம் 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்கள் தற்போது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தாண்டியுள்ளதால், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய அரசியல் சாசன கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.
 
இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள விஜய், 59 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக மக்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பு, தமிழகத்தின் விடிவு காலமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வு தேசிய அளவிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்தது.. மக்களவையில் கனிமொழி கேட்கும் மாற்றம்..!