தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்தது.. மக்களவையில் கனிமொழி கேட்கும் மாற்றம்..!
- முதல்வராகிறார் விஜய்.. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி
- முழு ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கும் விஜய்!.. விரைவில் முதல்வராக பதவியேற்பு?...
- திமுக, அதிமுக தலைவர்களை கைது செய்வோம் என மிரட்டலாமா?.. விசிக பொதுச்செயலாளர் கோபம்!...
- தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு!.. ஆட்சி அமைப்பாரா விஜய்?...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்.. சரியாக கணித்திருந்த பஞ்சாங்கம்...
தமிழக அரசியல் களம் தற்போது சந்தித்து வரும் வரலாறு காணாத குழப்பங்களுக்கு மத்தியில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கணிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெக தலைவர் விஜய்யால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ள நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி காரணமாக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் முடிவை நோக்கி ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கிறது.
இந்தச் சூழலில், 'பராபவ' வருடத்திற்கான பஞ்சாங்கக் குறிப்பில், "தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒரே கூட்டணியில் திரள நேரிடும்; அவர்களுக்குச் சிறப்பான ராஜயோக பலன்கள் கிட்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அதில் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நகர்வுகளின்படி, விஜய்யை ஓரங்கட்டப் பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கக்கூடும் என்ற தகவல்கள் உலா வரும் நிலையில், பஞ்சாங்கத்தின் இந்தக் கணிப்பு அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுமா அல்லது தவெக-வின் வியூகம் வெல்லுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். எது எப்படியோ, ஆன்மீகக் கணிப்புகளும் அரசியல் அதிரடிகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பது தமிழக அரசியலில் ஒரு புதுமையான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
