1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Controversial documentary not screened! – Chennai University

சர்ச்சைக்குரிய ஆவணப்படம் திரையிடவில்லை! – சென்னை பல்கலைக்கழகம்!

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய பிரதமர் குறித்த ஆவணப்படம் திரையிட அனுமதியில்லை என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் பலர் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதமாக அரசின் செயல்பாடுகள் உள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த தடை செய்யப்பட்ட ஆவணப்படம் கேரளா, ஐதராபாத் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று சென்னை பிரசிடென்சி கல்லூரி விடுதியில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படம் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளாகத்திற்கு தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தை திரையிட அனுமதி கிடையாது எனவும், மீறி திரையிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இதை மோடியால் தாங்கி கொள்ள முடியுமா? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி