ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (12:21 IST)

’பாத்துட்டா.. போய்ட்டே இரு’; தொண்டர்களை விரட்டிய திமுக அமைச்சர்! – மீண்டும் சர்ச்சை!

KN Nehru
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை காண வந்த தொண்டர்களை அமைச்சர் கே.என்.நேரு விரட்டி தள்ளிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வீரவணக்க நாள் அன்று திருவள்ளூரில் சேர் எடுத்து வராததால் தொண்டர் ஒருவர் மீது அமைச்சர் ஆவடி நாசர் கல்லை வீசியெறிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினரும், சமூக வலைதளங்களில் பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமைச்சர் கே.என்.நேருவின் செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தலைவாசலில் அமைச்சர் உதயநிதியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொண்டர்கள் பலர் உதயநிதிக்கு பூங்கொத்து, சால்வை உள்ளிட்டவற்றை அணிவித்து மரியாதை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு அருகில் நின்றபடி ஒவ்வொரு தொண்டரையும் கையை பிடித்து இழுத்து தள்ளியதோடு, சிலரை தலையில் அடிக்கவும் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K