1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai presidency college screening BBC documentary about Pm Modi

சென்னை கல்லூரிகளில் மோடியின் பிபிசி ஆவணப்படம் திரையிடல்!

Chennai Presidency college
பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்த ஆவணப்படம் தடை செய்யப்பட்ட நிலையில் சென்னை கல்லூரிகள் அந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் பலர் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதமாக அரசின் செயல்பாடுகள் உள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஆவணப்படம் ஐதராபாத், கேரளா கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தன்று சென்னை பிரெசிடென்சி கல்லூரியின் விக்டோரியா ஹாஸ்டலில் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. மேலும் இன்று சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆவணப்படம் திரையிடல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
”கந்தனுக்கு அரோகரா..!” விண்ணை முட்டிய முழக்கம்! – சிறப்பாக நடந்த பழனி கோவில் குடமுழுக்கு!