ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (13:32 IST)

சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள்! – தேதி, விவரங்கள் அறிவிப்பு!

சென்னை பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான செமஸ்டர் தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைகழகத்தின் கீழ் பல உறுப்பு கல்லூரிகள், கல்வி நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, தொலைதூரக் கல்வி என பலவகை படிப்புகளை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி, கல்வி நிலையங்களில் படித்து வரும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பை சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு, அனைத்து வகை தொலைதூர கல்வி படிப்புகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்வு 28ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

அனைத்து தேர்வுகள் மற்றும் விவரங்களை ideunom.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும், இந்த இணையதளத்திலேயே தேர்வு அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.