1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. constituency insights voting poll on dharapuram

தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?.. கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!...

vijay stalin
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அங்கு தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். தாராபுரத்தில் முதல்வர் விஜய் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் இன்று அங்கு அனைத்து கிராமங்களுக்கும் ரோட் ஷோ சென்று வாக்குகள் சேகரிக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதால் மீண்டும் அங்கு வெற்றிபெற்றுவிட வேண்டும் என அதிமுக நினைக்கிறது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. ஒருபக்கம், அந்த இரண்டு தொகுதிகளிலும் தவெகவை தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என திமுகவும் நினைக்கிறது. எனவே, திமுகவும் அந்த 2 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. constituency insight நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் 33.8 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும், அதிமுக 31.6 சதவீத வாக்குகளுடன் 2-ஆம் இடத்தையும், திமுக 28.4 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்தையும் பிடிக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், நாதக ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் என அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுராந்தகத்தில் யாருக்கு வெற்றி?.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?..