1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. constituency insights voting poll on by election

மதுராந்தகத்தில் யாருக்கு வெற்றி?.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?..

vijay
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற 6ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கு தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தவெகவை பொறுத்தவரை முதல்வர் விஜய் ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும், ரோட் ஷோவும் செய்தார். அப்போது, மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை பல கிராமங்களுக்கும் சென்று அவர் வாக்குகள் சேகரித்தார். அதேபோல் தாராபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.  மேலும், இன்று அவர் ரோட் ஷோவும் செய்யவிருக்கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால் எப்படியாவது அங்கு மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை காட்டவேண்டும் என அதிமுக நினைக்கிறது. ஒருபக்கம் 2026 தேர்தலில் தோற்றுப் போனதால் அந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற திமுகவும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இரண்டு தொகுதிகளிலும் திமுக தலைவர். மு.க ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே விஜயும் இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுராந்தகத்தில் தவெக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மதுராந்தகத்தில் தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என Constituency Insights நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அந்த தொகுதியில் தவெக 36 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் எனவ்வும், அதிமுக 31 சதவீத வாக்குகளை பெற்று 2-ம் இடத்தையும், திமுக 25.8 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்தையும் பெறும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சி  1.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆட்டோ ஓட்டினார்..பீட்சா கடையில் வேலை பார்த்தார்.. இன்று ரூ. 10,964 கோடிக்கு சொந்தக்காரர்...