1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan Instructs VCK Minister Vanni Arasu to Maintain Restraint in TVK Cabinet

பாமகவை நெருங்கும் தவெக.. அமைச்சர் வன்னியரசுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு?

thirumavalavan
தமிழக அரசியலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைச்சர் வன்னியரசுவுக்கு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் "அடக்கி வாசிக்குமாறு" அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இப்பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தை புகழ்ந்து பேசவோ அல்லது திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவிக்கவோ வேண்டாம் என வன்னியரசுவுக்கு திருமாவளவன் உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
 
அண்மைக் காலமாகத் தவெக மற்றும் பாமக இடையே அரசியல் ரீதியிலான நெருக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், எழும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே திருமாவளவன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. 
 
ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கொள்கை மற்றும் அதிகாரப் பகிர்வுகளில் நிலவும் நுட்பமான வேறுபாடுகளைச் சமாளிக்கவும், விசிகவின் அரசியல் நிலையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. இன்று மாலைக்குள் வெளியூர் ஆட்கள் வெளியேற வேண்டும்.. அதிரடி உத்தரவு