1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. From Auto Driver to Building a Rs 10,964 Crore Empire: The Story of Dr. Faruk G Patel

ஆட்டோ ஓட்டினார்..பீட்சா கடையில் வேலை பார்த்தார்.. இன்று ரூ. 10,964 கோடிக்கு சொந்தக்காரர்...

ஃபாரூக் படேல்
ஒரு பேருந்து நடத்துநரின் மகனாக பிறந்த டாக்டர் ஃபாரூக் ஜி படேல், ஆட்டோ ஓட்டுவது, ஆப்டிகல் கடையில் வேலை செய்வது, லண்டனில் பீட்சா ஹட்டில் பணிபுரிவது என பல சாதாரண வேலைகளை செய்து தன் வாழ்க்கையை தொடங்கினார். 1994-இல் ரூ. 1 லட்சம் முதலீட்டில் ஒரு சிறிய அலுவலகத்தில் தொழிலை தொடங்கிய இவர், விடாமுயற்சியால் இன்று ரூ. 10,964 கோடி மதிப்புள்ள மாபெரும் கேபி குழுமத்தை உருவாக்கியுள்ளார்.
 
தொடக்கத்தில் கட்டுமான பொருட்கள் கொண்டு சேர்க்கும் தொழிலை அமைத்த இவர், ஒருமுறை லாரி ஓட்டுநரும் தொழிலாளர்களும் வராததால், தானே லாரியை ஓட்டி சென்று நள்ளிரவு வரை செங்கற்களை இறக்கி தன் அர்ப்பணிப்பை நிருபித்தார். பின்னர் டெலிகாம் கோபுர கட்டமைப்பில் 13 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டார். தொடர்ந்து 2008-இல் சோலார் துறையில் கால்பதித்தபோது, உறவினர்களும் நண்பர்களும் இவரை பார்த்து பரிகாசம் செய்தனர். கடுமையான நிதி நெருக்கடியும் மன அழுத்தமும் ஏற்பட்டபோதிலும் தன் நம்பிக்கையை கைவிடவில்லை.
 
இன்று கேபி குழுமத்தின் கீழ் 'கேபிஐ கிரீன் எனர்ஜி', 'கேபி எனர்ஜி', 'கேபி கிரீன் இன்ஜினியரிங்' ஆகிய மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2030-க்குள் 10 ஜிஹாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காகக் கொண்டு இயங்கும் இவரது வெற்றி பயணம், "சிறியதாக தொடங்குங்கள், பெரிதாக யோசியுங்கள்" என்ற தாரக மந்திரத்தை இளைஞர்களுக்கு உணர்த்துகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாமகவை நெருங்கும் தவெக.. அமைச்சர் வன்னியரசுக்கு திருமாவளவன் அதிரடி உத்தரவு?