தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வு ரத்துக்கு நாங்களும் சப்போர்ட் பண்ணுவோம்! – சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ உறுதி!
- காலியாகும் காரைக்குடி பாஜக கூடாரம்? சைலெண்ட் மோடில் ஹெச்.ராஜா
- 4 கோடி வீடு - சிக்கிடான்ல ஹெச்.ராஜா... வச்சி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்!!
- ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து… பாஜக பிரமுகர் ஆதங்கம்!
- பிரபல நடிகரின் மனைவி கொரோனாவால் பலி !
தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை ஹெச் ராஜா அமுக்கிவிட்டார்… பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!
பாஜகவைச் சேர்ந்த சந்திரன் என்பவர் காரைக்குடி சட்டமன்ற தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை ஹெச் ராஜா பதுக்கிவிட்டதாகக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பாஜகவின் காரைக்குடி பெருநகர தலைவராக இருப்பவர் சந்திரன். இவர் காரைக்குடி தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு அதற்காக வேலை செய்துள்ளார். ஆனால் ஹெச் ராஜா தோல்வி அடைந்த நிலையில் சந்திரன் மேல் ஹெச் ராஜா தரப்பு கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹெச் ராஜா சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் என் உழைப்பின் மேல் சந்தேகப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் மருமகன் என்னை மிரட்டுகிறார். ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த தொகையை ஹெச் ராஜா செலவு செய்யவில்லை. அதை பதுக்கிவிட்டார். இப்போது அவர் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது பாஜகவுக்குள் உள் கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
