செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:27 IST)

காலியாகும் காரைக்குடி பாஜக கூடாரம்? சைலெண்ட் மோடில் ஹெச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதுள்ள அதிருப்தியால் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்வது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து ரூ.4 கோடி மதிப்பில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து பாஜக காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
 
இதனுடைய உச்ச கட்டமாக திடீரென பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.