1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (10:56 IST)

4 கோடி வீடு - சிக்கிடான்ல ஹெச்.ராஜா... வச்சி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #4கோடிவீடு என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இணையவாசிகள் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். 

 
காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து ரூ.4 கோடி மதிப்பில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #4கோடிவீடு என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இணையவாசிகள் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் கீழ் பகிரப்படும் சில பதிவுகள் பின்வருமாறு...