திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (13:12 IST)

போலீஸார் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி பலி! – எஸ்.ஐ கைது!

சேலம் வாழப்பாடி சோதனை சாவடியில் போலீஸாரால் தாக்கப்பட்ட வியாபாரி உயிரிழந்த நிலையில் சம்பந்தபட்ட எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீஸார் சோதனை நடத்தியபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மளிகை வியாபாரி மது போதையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் வியாபாரி மீது போலீஸார் லத்தியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த வியாபாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தபட்ட எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.