தொடர்புடைய செய்திகள்
- அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான்?!.. நாதகவில் நடப்பது என்ன?..
- அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி!.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..
- எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனுக்கு பதவி!.. அதிமுகவில் எதிர்ப்பு அலை!...
- மற்ற கட்சியினர் தவெகவில் இணைவது பலமா?. தலைவலியா?.. தவெகவுக்கு உள்ள சவால்...
- தவெகவுக்கு தாவும் அதிமுகவினர்!.. அப்செட்டில் தவெகவினர்!.. நடப்பது என்ன?!...
தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன்!..
தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்கி இரண்டே வருடங்களில் தவெக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. முன்னாள் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டார். இது தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
திமுக எதிர்க்கட்சி ஆகிவிட்டது. அதிமுகவோ மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. இதையடுத்து அதிமுகவிலிருந்து பலரும் தவெகவுக்கு தாவி வருகிறார்கள். அதிலும் இதுவரை நான்கு எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில்இணைந்துவிட்டனர். சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கரும் விரைவில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்துள்ளார்.பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற மகேந்திரன் அங்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன் தேர்தலில் சாதி, மதத்தை தவெக தோற்கடித்துக் காட்டியிருக்கிறது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடம் உருவாக்கியிருக்கிறார். அந்த நம்பிக்கையில்தான் நான் தவெகவில் இணைந்துள்ளேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற அனைத்து பாகுபாடுகளையும் தவெக உடைத்துவிட்டது. அதனால்தான் சிவப்பு துண்டோடு தவெகவில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
40 வருடங்களுக்கு மேல் கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்த சி மகேந்திரன் தவெகவுக்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.