பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த கணவன், மகனை கொன்ற பெண்.. கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்...
பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிநந்தன் என்பவருடன் 2021-ல் திருமணம் நடந்த ஹரிணிக்கு, ஸ்னாப்சாட் மூலம் வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியதால், கணவனை பிரிய ஹரிணி விரும்பியுள்ளார்.
ஆனால் அபிநந்தன் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டு புகார் அளித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் காதலன் வினய்யுடன் சேர்ந்து கொடூர திட்டத்தைத் தீட்டியுள்ளார் ஹரிணி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கணவனும் மகனும் பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது, திட்டமிட்டபடி நைட்டுக்கு மேல் வீட்டிற்குள் நுழைந்த வினய் மற்றும் ஹரிணி இருவரும் சேர்ந்து, அபிநந்தனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இந்த கொடூரத்தை பார்த்த ஐந்து வயது மகனையும் விட்டுவைக்காமல் அவனையும் கொலை செய்துள்ளனர்.
மறுநாள் காலை இருவரும் சடலமாக கிடப்பதாகக் காவல்துறையினருக்கு நாடகமாடி போன் செய்துள்ளார் ஹரிணி. எனினும், உடலில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த போலீசார், ஹரிணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து ஹரிணியும் வினய்யும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Edited by Siva
