தொடர்புடைய செய்திகள்
- சவால் விட்டுட்டு இப்ப ஏன் சைலண்ட் மோட்ல இருக்கீங்க!.. விஜயை விளாசிய ஸ்டாலின்!..
- தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறதா?!.. அமைச்சர் சிடி நிர்மல்குமார் சொல்வது என்ன?..
- புதிய விடியலை நோக்கி சுழலும் விஜய் அரசு: அரசியல் விமர்சகர் பெருமாள் மணி பாராட்டு!
- TASMAC-ல் கூடுதல் விலை..அடுத்த நாளே வேலை போய்டும்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி வார்னிங்
- பக்கா பிளானோடு டெல்லி சென்ற விஜய்!. 3 நாட்களில் யாரோடெல்லாம் மீட்டிங்?..
தமிழகம் முழுவதும் 45 ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி வேட்டை! அலறியடித்து ஓடிய புரோக்கர்கள்...
தமிழகத்தில் லஞ்சப் புழக்கம் அதிகமாக உள்ளதாக கருதப்படும் போக்குவரத்து துறையை கண்காணிக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் தகுதிச்சான்று போன்ற பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிய தவெக ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், பல்லாண்டுகளாக தொடரும் இந்த லஞ்ச நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஒருங்கிணைந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நெல்லை, திருச்சி, சேலம், மதுரை வாடிப்பட்டி உள்ளிட்ட 45 மையங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணத்துடன் பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
போலீஸார் உள்ளே நுழைந்ததை கண்ட புரோக்கர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அலுவலகத்தில் டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சோதனையில், கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
