1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cheif minister vijay started the training to mla

எம்.எல்.ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி!.. இன்று துவங்கி வைத்த முதல்வர் விஜய்!..

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு காங்கிரஸ், விடுதலை, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும்? எப்படி பதில் சொல்ல வேண்டும் எப்படி கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பற்றி இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.

தற்போது சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்களில் 50 சதவீதத்திற்கும் மேல் புதியவர்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 16ம் தேதியான இன்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.

இதையடுத்து, இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் விஜய் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் தலைமையில் எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படவிருக்கிறது. அதேநேரம் இந்த பயிற்சியில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.


வருகிற 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கவிருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு இந்த புத்தாக்க பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


About Writer
பாலகிருஷ்ணன்