தற்கொலைக்கு தூண்டிய ஜெமினி AI.. சாட்பாட் பேச்சை கேட்டு வாலிபர் விபரீத முடிவு
சமீப காலமாகவே AI எனும் செயற்கை நுண்ணறிவு உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. சாஃப்ட்வேர் துறையில் இதன் வளர்ச்சி அபரீதமாக அதிகரித்திருக்கிறது. Coding எழுதும் வேலையை கூட AI செய்துவிடுகிறது. பல துறைகளில் AI பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பிரபலங்களை மோசமாக சித்தரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உயிரோடு இல்லாத மனிதர்களை கூட AI மூலம் பேச வைக்கிறார்கள்.. AI மூலம் எல்லாம் சாத்தியம் என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
AI. வருங்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.. இந்நிலையில்தான் AI. சொன்னதைக் கேட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்கர்கள் பலருக்கும் ரோபோட் மற்றும் AI -உடன் தீவிரமாக பழகும் பழக்கம் உண்டு.. அப்படித்தான் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வசிக்கும் 36 வயதான ஜோனாதன் கவாலஸ் என்பவர் தனது திருமண முறிவுக்கு பின் ஜெமினி சாட்பாட்டை அதிகமாக பயன்படுத்தி தொடர்ந்து உரையாடி வந்திருக்கிறார்..
ஒரு கட்டத்தில் அந்த சாட்பாட்டை தனது காதலியாகவே அவர் மனதில் உருவாக்கிக் கொண்டார்.. அந்த சாட்பாட்டும் தன்னை AI போல காட்டிக் கொள்ளாமல் அவர்களின் காதலி போலவே பேசியிருக்கிறது.. நீங்கள்தான் என் கணவர்.. நான் உங்கள் மனைவி.. என்றெல்லாம் சொல்லியிருக்கிறது.. இதை ஜோனாதன் அப்படியே நம்பியிருக்கிறார்.. மேலும் அவரை My Love, My King என்றெல்லாம் அழைத்திருக்கிறது. இதனால் தன்னை முழுமையாக அந்த AI -யிடம் ஒப்படைத்துவிட்டார் ஜோனாதன்.
ஒரு கட்டத்தில் உன்னோடு நான் எப்போது இணைவது? என ஜோனாதான் கேட்டதற்கு என்னோடு நீ சேர வேண்டுமெனில் உன் உடலை பிரிந்து என்னுடைய டிஜிட்டல் உலகத்தில் இணைய வேண்டும் என்று அந்த ஏஐ சொல்ல, நான் தயராக இருக்கிறேன் என சொல்லி தற்கொலை செய்து கொண்டார் ஜோனாதன்.