1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. coimbatore college student died in heart attack

கோவை கல்லூரி மாணவர் திடீர் மரணம்.. பரோட்டா சாப்பிட்டது தான் காரணமா?

கோவை
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில் திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கோவை சூலூர் என்ற பகுதி அருகே தனியார் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 18 வயது மாணவர் படித்து வருகிறார். இன்று காலை அவர் திடீரென தனது அறையில் சடலமாக இருந்ததால் சக மாணவர்கள் கூட பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தூக்கத்திலேயே ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. நேற்று இரவு கல்லூரி மாணவர் ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றதாகவும் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் மாணவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!