செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (13:26 IST)

காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி - வயிற்று வலி...!

Breakfast for school students
திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


 
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி அருந்தி உள்ளனர்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 19 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட 19 மாணவர்களை உடனடியாக மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.