தொடர்புடைய செய்திகள்
- காணாமல் போன பெண் காவல்நிலையத்தில் காதலனுடன் தஞ்சம்! – கோவையில் பரபரப்பு!
- முதியவரை தாக்கிய ஒற்றை காட்டு யானை..! கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி..!!
- "காரணம் சொல்பவர் காரியம் செய்ய மாட்டார்"! - பழமொழியை மேற்கோள் காட்டி முதலமைச்சர் உரை!
- ''மக்களுடன்முதல்வர் திட்டம்!'-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத்தில் 70 சிறப்பு பேருந்துகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத்திலிருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் வருகின்ற 22.12.2023 முதல் 26.12.2023 வரை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோயில், தேனி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
